இந்தியா: தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நேற்று பேட்டி அளித்தார்.

இதன்போது அவர் கூறுகையில் 9 வாரங்களாக 100 நாள வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு உரிய சம்பளத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கவில்லை.
 
ஆனால் டெல்லியில் இருந்து வந்து தமிழகத்தை தூய்மை செய்வத போல் நாடகமாடி வருகிறார். அவரது வேலையை சரியாக செய்து ஏழை, எளிய மக்களின் கஷ்டத்தை போக்க வேண்டும். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே பாஜகவினர், கன்னட அமைப்பினர் மூலம் மொழி பிரச்சினையை உருவாக்கி வருகிறார்கள்.

பாஜக- அதிமுக கூட்டணி முற்றிலும் முடிவுக்கு வரவில்லை. மோடியை பிரதமராக வரவிடமாட்டோம் என சொல்ல எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினருக்கு தைரியம் இல்லை. இன்னும் பின் வழியாக சென்று மோடியிடம் பூங்கொத்து கொடுத்துவிட்டுதான் வருகிறார்கள்.

அதனால்தான் இந்த கூட்டணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது என நாங்கள் சொல்கிறோம். வெளி வேஷத்திற்காகவும் அண்ணாமலைக்காகவும் கூட்டணி முறிந்துவிட்டதாக நாடகமாடி வருகிறார்கள். இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார்.