நியூசிலாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் North Island இல் உள்ள 1000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளது.

மின்சாரம் வழங்கும் நிறுவனமான பவர்கோ கூறுகையில், New Plymouth முதல் Wairarapa மற்றும் Mt Maunganui. வரையிலான பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Featherston இல் மொத்தம் 211 வீடுகள், Tararua மாவட்டத்தில் உள்ள Pongaroa வில் 55 வீடுகள் மற்றும் Mt Maunganui இல் 55 வீடுகள் மின்சாரம் இல்லாமல் உள்ளதாக அது தெரிவித்துள்ளது.

MetService, வடக்கில் Hawke's Bay, Tararua, Wairarapa மற்றும் Wellington மற்றும் தெற்கில் Marlborough, Clutha, Southland, Feordland, Stewart Island ஆகிய இடங்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

Canterbury High Country, Southern Lakes, Buller மற்றும் Westland ஆகிய பகுதிகளுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.