Breaking News

ஆக்லாந்தின் பழைமையான சிவிக் திரையரங்கில் தீ விபத்து..!!

ஆக்லாந்தின் பழைமையான சிவிக் திரையரங்கில் தீ விபத்து..!!

ஆக்லாந்தின் மிகப் பழைமையான சிவிக் திரையரங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நண்பகலுக்கு முன்னதாக இந்த வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தில் புகை பரவியதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தில் ஏழு தீயணைப்பு வாகனங்களும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

சிவிக் தியேட்டர் 1929 இல் திறக்கப்பட்டது மற்றும் ஆக்லாந்து நகரத்தின் மிகவும் தனித்துவமான பாரம்பரிய கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும்.