Napier துறைமுகத்தில் கடந்த மார்ச் மாதம் 83 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டதை அடுத்து ஆக்லாந்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருட்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என கூறப்படுகிறது.

83 கிலோகிராம் மெத்தாம்பெட்டமைனின் மதிப்பு சுமார் 29 மில்லியன் டாலர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த போதைப்பொருட்கள் ஆக்லாந்து சந்தைக்காக பயன்படுத்தப்பட்டவை என ஆதாரங்கள் காட்டுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு அறிக்கையில், டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் டேரின் தாம்சன்,  நியூசிலாந்து சுங்கத் துறையுடன் காவல்துறை இணைந்து இந்த இறக்குமதியின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை அடையாளம் காண நாங்கள் எங்கள் விசாரணைகளைத் தொடர்கிறோம் என தெரிவித்தார்.

இந்தக் கைதுகள் காவல்துறைக்கும் சுங்கத்துறைக்கும் இடையே உள்ள சிறந்த ஒத்துழைப்பையும், நமது எல்லைப் பாதுகாப்பின் வலிமையையும் நிரூபிக்கின்றன எனவும், மேலும் நியூசிலாந்து மக்களை மெத்தம்பேட்டமைனுடன் தொடர்புடைய தீங்குகளிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க சட்ட அமலாக்கத்தின் உறுதியை இது மீண்டும் எடுத்துக்காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் 27 மற்றும் 33 வயதுக்கு இடைப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் நான்கு பேரும் ஜூன் 30 அன்று Manukau மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.