ஜப்பானிலிருந்து பப்பு நியூ கினியா நாட்டிற்கு சென்ற பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பே மற்றும் அந்நாட்டின் மேற்கு புதிய பிரிட்டன் கவர்னரான திரு.சசீந்திரன் முத்துவேல் ( நமது விருநதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் ) அவரது மனைவி திருமதி சுபா சசீந்திரன் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்று பிரதமரின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர் பிரதமருடன் ஏற்பட்ட சந்திப்பில் திருமதி சுபா சசீந்திரன் தமிழுக்கு உலகளவில் பெருமை சேர்த்த உலக பொதுமறையாம் திருக்குறளை பப்பு நியூ கினியாவின் " டாக் பிசின் " என்ற பழங்குடியின மொழியில் மொழிபெயர்த்து நூல் வடிவில் வெளியிட்டதை பிரதமரிடம் வழங்கினார்.

பிரதமர் அதற்கு மகிழ்ந்து போய் திருமதி சுபாவை பெரிதும் பாராட்டினார் . அதற்கு துணை நின்ற சுபாவின் கணவர் சசீந்திரன் முத்துவேலையும் பாராட்டி மகிழ்ந்தார்.‌‌ இந்த நிகழ்வை பிரதமர் தனது "டிவிட்டர்" பதிவில் ஆங்கிலம் , இந்தியில் மட்டுமின்றி தமிழிலும் வெளியிட்டு இருக்கிறார்.

அவரது தமிழ் மொழி , திருக்குறள் மீதான பற்றுதலை தொடர்ந்து கண்டறிந்து வருகிறோம் மகிழ்கிறோம்.

செய்தியாளர்.
சி. தாமோதரன் - இந்தியா