பிரபல மூத்த நடிகர் சரத்பாபு காலமானார். அவருக்கு வயது 71. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலமானார்.
தமிழில் , அண்ணாமலை, முத்து போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் சரத்பாபு.
இவர் தமிழில் கடைசியாக இந்தாண்டு வெளியான வசந்தமுல்லை படத்தில் நடித்திருந்தார்.
அவரின் மறைவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.