Breaking News

Cambridge நகரில் இடம்பெற்ற தொடர் வழிப்பறி மற்றும் திருட்டுக்கள் - எட்டு பேர் கைது...!!

Cambridge நகரில் இடம்பெற்ற தொடர் வழிப்பறி மற்றும் திருட்டுக்கள் - எட்டு பேர் கைது...!!

Waikato பிராந்திய நகரமான Cambridge இல் இடம்பெற்ற தொடர் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மே மாத தொடக்கத்தில் இருந்து இவ்வாறான குற்றச்செயல்கள் நகரில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது 34 வழிப்பறி மற்றும் கடை திருட்டு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் இதுபோன்ற குற்றங்களை நாங்கள் தொடர்ந்து விசாரிப்போம் என்று Cambridge சார்ஜென்ட் பென் ஜோல் கூறினார்.

எங்கள் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குற்றவாளிகளை கைது செய்ய நாங்கள் கடுமையாக உழைக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

சில குற்றவாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் போது பிடிப்பட்டதாக அவர் கூறினார்.