ஆக்லாந்தின் Glenfield மாலில் உள்ள நகைக்கடை ஒன்று இன்று காலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது‌

இந்த கொள்ளைச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Downing தெருவில் அமைந்துள்ள குறித்த மாலில் உள்ள Michael Hill நகைக்கடையில் பலர் நுழைந்து, காட்சிப்படுத்தல் பெட்டிகளை அடித்து நொறுக்கி, பல பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டனர் என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

குற்றவாளிகளை கைது செய்ய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.