வெலிங்டனின் தெற்கு கடற்கரையில் அழிந்துவரும் பூர்வீக பென்குயின் ஒன்று கொல்லப்பட்டதை அடுத்து கடற்கரைகளில் தங்கள் நாய்களை அழைத்து செல்பவர்களுக்கு வன மற்றும் பறவைகள் பாதுகாப்புக் குழு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெலிங்டனின் தெற்கு கடற்கரையில் ஒரு சிறிய நீல பென்குயின் இறந்து கிடப்பதாக DOC இற்கு பொதுமக்களிடமிருந்து தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த நீல பென்குயின், வெலிங்டன் மிருகக்காட்சிசாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இந்த பென்குயினை மீட்ட வன மற்றும் பறவைகள் பாதுகாப்பு
குழு உறுப்பினர் பிரிட்டானி புளோரன்ஸ்-பெனட் கூறுகையில், ஒரு பெண் நீல நிற பென்குயின் இறந்து கிடந்ததைக் கண்டு வருத்தமடைந்ததாகக் கூறினார்.

அப்பகுதியில் உள்ள நாய்களால் இந்த நீல நிற பென்குயின்கள் ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே தங்கள் நாய்களை அழைத்து செல்பவர்கள் கடற்கரையை சுற்றி விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம்.

காயம்பட்ட அல்லது இறந்த பூர்வீக வனவிலங்குகள் பற்றி புகார் அளிக்க 0800 362 468 என்ற எண்ணில் பாதுகாப்புத் துறையை தொடர்பு கொள்ளலாம்.