பசிபிக் பகுதியில் உள்ள Loyalty தீவுகளுக்கு சற்று அப்பால் இரண்டு நாட்களில் ஏற்பட்ட இரண்டு பாரிய நிலநடுக்கங்களால் நியூசிலாந்திற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (NEMA) தெரிவித்துள்ளது.

இன்று மதியம் 2 மணிக்கு சற்று முன்பு 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 45 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனையடுத்து 18 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது.

இந்நிலையில் ஆபத்தை மதிப்பீடு செய்த பிறகு, நியூசிலாந்திற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று NEMA கூறியது.

நேற்று Loyalty தீவுகளில் தென்கிழக்கு பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து நியூ கலிடோனியா, பிஜி மற்றும் Vanuatu விற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.