Breaking News

பலத்த காற்று காரணமாக மூடப்பட்ட ஆக்லாந்து துறைமுகப் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது...!!

பலத்த காற்று காரணமாக மூடப்பட்ட ஆக்லாந்து துறைமுகப் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது...!!

பலத்த காற்று காரணமாக மூடப்பட்ட ஆக்லாந்தின் துறைமுகப் பாலம் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்காலிக வேகக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதாக Waka Kotahi தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் Western Ring Route ஐ மாற்றுப்பாதையாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

ஆக்லாந்தில் தற்போது கடுமையான காற்று வீசுகிறது.

MetService, Motueka விற்கு மேற்கே Tasman இல் பிற்பகல் வரை பலத்த மழை பெய்யும் என்றும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தது.

கனமழையால் நீரோடைகள் மற்றும் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வாகனம் ஓட்டும் நிலைமைகளை அபாயகரமானதாக மாற்றலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Northland மற்றும் ஆக்லாந்தில் நாள் முழுவதும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பலத்த காற்று நாளைய தினம் வைகாடோ, Taranaki மற்றும் Gisborne நோக்கி நகரும் என கூறப்பட்டுள்ளது.