அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோரில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென எரிந்து வீட்டின் மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியது.

இதனையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 3 குழந்தைகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் சிலர் காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. எனவே இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.