இன்று காலை வைகாடோவில் கார் மற்றும் லாரி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலை 9.14 மணியளவில் Hauraki மாவட்டத்தில் உள்ள Miranda சாலையில் இந்த கடுமையான விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மாலை 4.45 மணியளவில் ஒரு அறிக்கையில், இந்த விபத்தில் கார் சாரதி இறந்துவிட்டதாக பொலிஸார் அறிவித்தனர்.

இந்த துயரமான நேரத்தில் காவல்துறையின் எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.