இந்தியா: தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தில் தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனியார் நிறுவனங்கள் கொடுப்பது போல லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்காவிட்டால் ஆவின் நிறுவனத்திற்கு பாலை விநியோகம் செய்யப்போவதில்லை என்று பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இன்று முதல் பல ஊர்களில் பால் உற்பத்தியாளர்கள் சாலைகளில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பாலை அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த போராட்டம் குறித்து செய்தி சேனலுக்கு விளக்கம் அளித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆவின் பாலுக்கு இதுவரை தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என்று கூறினார்.

பால் விநியோகம் சீராக நடைபெறுவதாகவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எதிர்கட்சியினர் தூண்டுதலின் பேரில் ஒருசில சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.