கடந்த புதன்கிழமை இரவு வைகாடோ நகரமான Ngāruawāhia வில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இரவு 9.30க்கு சற்று முன்னர் Cavan தெரு முகவரியில் கடுமையான தாக்குதல் நடந்ததாகக் காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அங்கு பெண் ஒருவரை சடலமாக மீட்டனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று Hamilton மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.