Breaking News

1060 கோடி வசூலை அள்ளிக் குவித்த ஷாருக்கானின் பதான் திரைப்படம்...!!

1060 கோடி வசூலை அள்ளிக் குவித்த ஷாருக்கானின் பதான் திரைப்படம்...!!

ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த 'பதான்' இந்தி படம் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி திரைக்கு வந்தது.

4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் வந்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது.

ஆனால் பதான் படத்தில் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் கவர்ச்சி நடனம் ஆடியதை கண்டித்து படம் ரிலீசாகும் முன்பே எதிர்ப்பு கிளம்பியது. ஷாருக்கான், தீபிகா படுகோனே கொடும்பாவியையும் எரித்தனர். தியேட்டர்களில் வைத்திருந்த பேனர்களையும் கிழித்து எறிந்தனர்.

எதிர்ப்பை மீறி படத்துக்கு ரசிகர்கள் மத்தில் வரவேற்பு கிடைத்து. நல்ல வசூலும் பார்த்தது. முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூலை குவித்தது.

4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் இதுவரை உலகம் முழுவதும் பதான் படம் ரூ.1060 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.