வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு என்ன கூறினாலும் அதை அந்நாட்டு மக்கள் எந்தவொரு எதிர்க்கேள்வியும் இல்லாமல் அப்படியே செய்ய வேண்டும். மீறுபவர்களுக்கு மரணம் நிச்சயம்.

மேலும், வட கொரியாவில் இணையதளம் கூட கிடையாது. ஒரே ஒரு தொலைக்காட்சி சேனல்தான் அங்கு இயங்கி வருகிறது. அதிலும் அதிபரின் உரையும், அவரது பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும். இதனால் வடகொரியாவில் என்ன நடந்தாலும் அது வெளியுலகுக்கு தெரியவராது.

இந்த சூழலில்தான் பயங்கர சம்பவம் ஒன்று வட கொரியாவில் நடந்திருக்கிறது.

வட கொரியாவில் இணையதளம் தடை செய்யப்பட்டிருந்த போதிலும், ராணுவ உயரதிகாரிகளுக்கும், உளவுத்துறையினருக்கும் இணையதளத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் அவர்கள் இணையத்தில் என்னென்ன தேடுகிறார்கள் என்பதை கண்காணிக்க அரசாங்கக் குழு ஒன்று உள்ளது. இந்நிலையில் வட கொரிய உளவுத்துறை உயரதிகாரி ஒருவர் அதிபர் கிம் ஜாங் உன் குறித்து சாதாரணமாக கூகுளில் தேடி பார்த்திருக்கிறார்.

இதையடுத்து, இந்த விஷயத்தை அதிபர் கிம் ஜாங் உன்னிடம் அந்த அரசாங்க குழு இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்திருக்கிறது. அவ்வளவுதான். கோபத்தில் கொக்கரித்திருக்கிறார் கிம் ஜாங் உன்.

'அது எப்படி என்னை பற்றி இணையத்தில் தேடலாம்..' என கொந்தளித்துள்ளார். பின்னர் உடனடியாக தனது மெய்க்காப்பாளர்களை அழைத்த கிம் ஜாங் உன், அந்த உளவுத்துறை அதிகாரிக்கு துப்பாக்கிப் படையினரால மரண தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டிருக்கிறார். இன்று அந்த அதிகாரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.