வெலிங்டனில் இடம்பெற்ற மோசமான திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருட்டுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

ஆனால் மேலும் பல கைதுகள் இடம்பெறலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே கடந்த ஆண்டு நவம்பரில் திருடப்பட்ட, 3000க்கும் மேற்பட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றினர்.

மேலும் கடந்த 3 ஆண்டுகளில் திருடப்பட்டதாகக் கருதப்படும் ஏராளமான பைக்குகள், கருவிகள், ஹார்ட்வேர் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் உட்பட 5000க்கும் அதிகமான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக இன்று ஒரு அறிக்கையில் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை, 298 பைக்குகளில் 93 பைக்குகள், 29 இ-ஸ்கூட்டர்களில் 10 ஸ்கூட்டர்கள் மற்றும் 49 மடிக்கணினிகளில் 11 மடிக்கணினிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவை  உரிமையாளர்கள் அல்லது காப்பீட்டு நிறுவனங்களுக்கு திருப்பித் தரப்படும் என கூறப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்களை முடிந்தவரை சரியான உரிமையாளர்களுக்கு திருப்பித் தருவதற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்று துப்பறியும் மூத்த சார்ஜென்ட் டிம் லீச் கூறினார்.

"திருடப்பட்ட பொருட்களின் உரிமையாளர்கள், குறிப்பாக அது தனித்துவமானது அல்லது அடையாளம் காணக்கூடிய அம்சம், குறியிடுதல் அல்லது அறியப்பட்ட வரிசை எண் இருந்தால், காவல்துறையைத் தொடர்புகொண்டு கூடுதல் தகவலை வழங்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று லீட்ச் கூறினார்.