வெலிங்டனின் Lyall Bay இல் "பெரிய" சுறா மீன் ஒன்று நீந்திக் கொண்டிருப்பதைக் கண்டதையடுத்து, கடற்கரையில் இருந்தவர்கள் நீரை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டனர்.

குறித்த சுறா மதியம் 12.50 மணியளவில் தோன்றியதாக Lyall Bay Lifeguard செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார்

அப்போதுதான் நீச்சல் வீரர்கள் தண்ணீரை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டனர்.

Lyall Bay Lifeguard குழு சுறாவைக் கவனிப்பதற்காக ஒரு படகை எடுத்துச் சென்றதாகவும், அது ஒன்று முதல் இரண்டு மீட்டர் நீளம் இருப்பதாக விவரித்ததாகவும் அவர் கூறினார்.

அவர்கள் அளவை தீர்மானிக்க முடிந்தாலும், அந்த சுறா எந்த இனத்தைச் சேர்ந்தது என தெரியவில்லை.

"எங்கள் பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக, எங்களால் சுறாவை நெருங்க முடியவில்லை, அதனால் அது என்ன இனம் என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை," என்று செய்தி தொடர்பாளர் கூறினார்.

இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடற்கரை மூடப்பட்டது.

மேலும் பிற்பகல் 2.15 மணியளவில் கடற்கரை மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.

DOC இன் கூற்றுப்படி, நியூசிலாந்து நீரில் 27-சென்டிமீட்டர் பிக்மி சுறாக்கள் முதல் பெரிய வெள்ளை சுறாக்கள்  மற்றும் 12 மீட்டர் நீளமுள்ள திமிங்கல சுறாக்கள் வரை சுமார் 66 வகையான சுறாக்கள் காணப்படுகின்றன.