விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் முதல் வாரத்திலே சண்டைகள் அனல் பறக்க தொடங்கியது.

தற்போது 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ் ஆறாவது சீசன்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு மைனா நந்தினி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் மணிகண்டன், மைனா மற்றும் தனலட்சுமி ஆகியோர் பேசிக் கொண்டிருக்கும் போது பிக்பாஸ் ரெஸ்ட் எடுக்கவே விடாமல் டாஸ்க் கொடுத்து வருவதாக மைனா கூறியதும், அதுக்குத்தான உனக்கு ரூ.1.5 லட்சம் சம்பளம் தர்றாங்க என மணிகண்டன் சொல்கிறார்.

இதனைக்கேட்டு ஷாக்கான தனலட்சுமி, நிஜமாவே உங்களுக்கு ஒரு நாளைக்கு அவ்ளோ சம்பளமா என கேட்க, மைனாவும் அதற்கு ஆமாம் என்பதை போல தலை ஆட்டுகிறார்.

பின்னர் மொத்த தொகையை கணக்கு போட்ட மணிகண்டன், மைனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மொத்தமாக அவருக்கு 90 லட்சம் கிடைக்கும் என சொன்னதை கேட்டு தனலட்சுமி ஆடிப்போயுள்ளார்.

அவர் மட்டுமல்லாமல் ரசிகர்களும் இந்த செய்தியை கேட்டு வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.