இலங்கையில் ATM களில் இருந்து சட்டவிரோதமாக பணம் எடுத்த 7 நைஜீரியர்களை குற்றவியல் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

இக்கும்பலில் சுமார் 30 நபர்கள் இயங்கி வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த கும்பலின் உறுப்பினர்கள் ATM இயந்திரங்களை சரிசெய்வதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும் நீண்ட காலமாக ஏடிஎம்களில் இருந்து பணத்தை திருடுவதில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ATM இயந்திரங்களில் இருந்து பணம் குறைவடைவதாக பொலிஸாருக்கு பல புகார்கள் வந்ததை தொடர்ந்து, இந்த கும்பலை கைது செய்ய தீவிர நடவடிக்கையை மேற்கொண்டதாக சிஐடி தெரிவித்துள்ளது.

இந்த மோசடி தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவும், மேலும் எஞ்சியுள்ள கும்பல் உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையைத் தொடரவும், கைது செய்யப்பட்டுள்ள 7 நைஜீரியர்களிடம் விசாரித்து வருவதாக சிஐடியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடிக்கு பின்னால் ஏதேனும் சூத்திரதாரி இருக்கிறாரா என்று விசாரிப்பதாகவும், இலங்கையர்கள் யாராவது சம்பந்தப்பட்டிருந்தால் அதைக் கண்டுபிடித்து கைது செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.