வெலிங்டன் தமிழ்ச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி அமைச்சின் சமூகமையக் கல்வித்திட்டம் Lower Hutt இல் இடம்பெற உள்ளது.

உலகின் மாறுபட்ட கலாச்சாரம், கல்வி முறையில் இருந்து வந்து நியூசிலாந்தில் தமது புதிய அத்தியாயத்தை தொடங்குபவர்களுக்கான அறிமுக மையமாக இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது. 

கல்வி அமைச்சில் இருந்து மிகவும் தேர்ச்சிபெற்ற நிபுணரால் தமிழ் மொழியில் குறித்த பயிலரங்கு நடாத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்வானது எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி 45 Laings Road, Lower Hutt, James Coe 1&2 இல் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை இடம்பெறும். அனைவருக்கும் நுழைவு இலவசம்.

இந்த அறிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்.