மலையாள சினிமாவில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை சம்யுக்தா மேனன். 2018ல் வெளியான மலையாள திரைப்படமான தீவண்டி படம்தான் இவரது முதல் திரைப்படமாகும். தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழில் நடித்துவந்த இவருக்கு எரிடா படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது மலையாளம் மட்டுமல்லது தமிழ் மற்றும் தெலுங்கிலும் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார் சம்யுக்தா. களரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு ஜூலை காற்றில், எரிடா போன்ற திரைப்படங்கள் நல்ல ஓபனிங் பெற்றுத்தரவில்லை.

எனினும் 2023ல் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்த வாத்தி திரைப்படம் தமிழ் சினிமாவில் சம்யுக்தா மேனனுக்கு அதிக வரவேற்பை பெற்றுத்தந்தது. வாத்தி திரைப்படம் தெலுங்கில் சார் என ரிலீஸ் ஆனது. வாத்தி படத்தில் நடித்தபோது தனுஷ் மற்றும் சம்யுக்தா காதலிப்பதாக வதந்திகள் பரவியது.

ஆனால் அவையெல்லாம் வெறும் கிசுகிசு தான் என திரைவட்டாரங்களில் இருந்து தகவல் வெளியானது. இந்நிலையில் சம்யுக்தா மேனனின் திருமணம் குறித்த சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே சம்யுக்தா மேனன் அவரது நெருங்கிய நண்பருடன் டேட்டிங் செய்துவருகிறார். பல வருடங்களாக காதலித்துவரும் காதலரை திருமணம் செய்யபோகிறாராம் சம்யுக்தா. சம்யுக்த மற்றும் அவரது காதலர் வீட்டிலும் இவர்களது திருமணத்திற்கு வேகம் காட்டி வருகிறார்களாம்.

அந்த வகையில், சம்யுக்த அமேனோன் மற்றும் அவரது காதலருக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என சினி வட்டாரங்கள் கூறுகிறது. ஏற்கனவே இவர்களது திருமணத்திற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாம்.

சம்யுக்தாவின் திருமண செய்தி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இவரை கட்டிக்கப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதே ரசிகர்கள் கேட்க்கும் கேள்வியாக இருக்கிறது.