சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட அயலான், பட்ஜெட் பிரச்சினை, கொரோனா லாக் டவுன் என பல பிரச்சினைகளால் தாமதமாகிக் கொண்டே இருந்தது. இதனையடுத்து இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், கிராபிக்ஸ் வேலைகள் தாமதமானதால், பொங்கலுக்கு மாற்றப்பட்டது.

அதன்படி இந்தப் படம் அடுத்த மாதம் 12ம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் அறிமுகமான ரவிக்குமார், அயலான் படத்தையும் இயக்கியுள்ளார். சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் ஏலியன்ஸை பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. தமிழில் முதல் ஏலியன்ஸ் படம் அயலான் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அயலானில் ஏலியன்ஸ் வரும் காட்சிகளில் கிராபிக்ஸ் வேலைகள் தரமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஏலியன்ஸ் போர்ஷனை இன்னும் ரசிக்க வைப்பதற்காக, அதற்கு வடிவேலுவின் வாய்ஸ் ஓவரை பயன்படுத்த படக்குழு பிளான் செய்துள்ளதாம். அதாவது ஏலியன்ஸுக்கு வடிவேலுவை டப்பிங் பேச வைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறதாம்.

ஒருவேளை வடிவேலு சம்மதம் சொல்லிவிட்டால், அயலான் ஏலியன் வடிவேலு வாய்ஸ் ஓவரில் கலங்கடிக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனாலும் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அப்டேட் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில், அயலான் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 26ம் திகதி நடைபெறவுள்ளதாம். இதில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.