லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநராக வலம் வருகிறார். கடந்த ஆண்டு கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்னும் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்தார். இந்த ஆண்டு அதையும் மிஞ்சும் அளவுக்கு தளபதி விஜயை வைத்து அவர் இயக்கிய லியோ திரைப்படம் 600 கோடி வசூலை ஈட்டியது.

அடுத்ததாக அடுத்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 161 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்நிலையில், அவரது ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் ஃபேஸ்புக் பக்கத்தில் வைரல் யோகா எனும் ஆபாச வீடியோக்கள் அதிக அளவில் அப்லோட் செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் ஏகப்பட்ட பேர் அதை ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

சமீபத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் முழுவதையும் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் விஷமிகள் பதிவேற்றம் செய்த நிலையில், தற்போது ஆபாச யோகா வீடியோக்கள் லோகேஷ் கனகராஜ் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பகிர் கிளப்பியுள்ளன.

தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜை யாரோ திட்டமிட்டு டார்கெட் செய்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக லியோ படம் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டு அவரது கணக்கு மீட்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை சைபர் கிரைம் பிடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.