தளபதி விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடித்து வருகிறார். தளபதி 68 என இப்போதைக்கு அறியப்படும் இந்த படத்தின் பெயர் அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என தெரிகிறது. தளபதி 68 படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்திருக்கிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் சினேகா மற்றும் லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம் உள்ளிட்டவர்களும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் பொருட்ச்செலவு குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பத்து நிமிடங்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு காட்சிக்காக ஆறு கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள் தளபதி 68 பட குழுவினர். இந்த செலவிற்கு ஏஜிஎஸ் நிறுவனமும் சம்மதித்து இருப்பதாக தெரிகிறது. மேலும் தளபதி 68 படத்தில் விஜய் இரண்டு ரோலில் தந்தை மற்றும் மகன் என நடிப்பதாகவும் பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ஆனால் இந்த படத்தில் விஜய் இளமையான தோற்றத்தில் நடிப்பார் எனவும் அந்த இளமையான தோற்றத்தை வரவைப்பதற்காக டீ-ஏஜிங் (De - Aging technique) பிராசஸ் என சொல்லக்கூடிய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் இயக்குனர் வெங்கட் பிரபு முடிவெடுத்துள்ளாராம். கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மட்டுமே வரக்கூடிய விஜய்யின் இளம் கதாபாத்திரத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சி அமைப்பிற்காக 6 கோடி ரூபாய் செலவு செய்யப் போகிறார்களாம் தளபதி 68 பட குழுவினர்.

அந்த வகையில் 2000களில் பார்த்த விஜயை, தளபதி 68 படத்தில் மீண்டும் பார்க்கலாம் என திரைப்பட வட்டாரங்கள் கூறுகிறார்கள்.