நடிகர் விஜய் சேதுபதி. இப்போது தமிழ் மட்டும் அல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என எல்லா மொழிகளிலும் நடித்து வருகிறார்.

ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வந்த விஜய் சேதுபதி இனிமேல் வில்லனாக நடிக்கப் போவதில்லை என அதிரடியாக அறிவித்திருந்தார். அதன் பின்னணி குறித்து விஜய் சேதுபதி சொன்ன ஸ்டேட்மெண்ட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தற்போதைய நிலவரப்படி 3 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதில், விஜய் சேதுபதியின் 51வது படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார்.

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆறுமுககுமார். இவரது இரண்டாவது படமே விஜய் சேதுபதியுடன் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் டைட்டில் கன்ஃபார்ம் ஆகாத இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் மலேசியாவில் நிறைவுப் பெற்றது. அதேவேகத்தில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்கிவிட்டார் இயக்குநர்.

முக்கியமாக இந்தப் படத்தை அடுத்தாண்டு ஏப்ரலில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். ரஜினியின் தலைவர் 170 திரைப்படம் 2024 தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விடாமுயற்சி படமும் அஜித் பிறந்தநாள் தினமான மே 1ம் திகதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. தலைவர் 170, விடாமுயற்சி தவிர்த்து மேலும் சில படங்களும் ஏப்ரல், மே மாதங்களில் வெளியாகின்றன.

இதனுடன் விஜய் சேதுபதியின் 51வது படமும் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக விஜய் சேதுபதி இந்தியில் நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா ரிலீஸ் திகதியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.