பிக் பாஸ் 7 வீட்டில் ரவீணா தாஹா, மணி சந்திரா இடையே காதல் என்று பேசப்படுகிறது. ஆனால் அந்த காதல் பிக் பாஸ் வீட்டில் உருவாகவில்லை. காதலர்களான அவர்களை ஜோடியாக அழைத்து வந்திருக்கிறார் பிக் பாஸ்.

இந்நிலையில் தான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் விஷ்ணு விஜய்க்கும், பூர்ணிமாவுக்கும் இடையே காதல் என பேச்சு கிளம்பியிருக்கிறது. 

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்களோ, விஷ்ணுவுக்கும், பூர்ணிமாவுக்கும் இடையே பிரேக்கப் ஆகிவிட்டது போன்று என்கிறார்கள்.

ப்ரொமோ வீடியோவின் விபரத்தை பார்ப்போம். போட்டியாளர்களுக்கு ஜாக்பாட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் 5 கோல்டு ஸ்டார்கள் கிடைக்கப் போகிறது.

இந்த ஸ்டார்ஸ் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் போராடலாம். வேறு ஒருத்தருக்கு போகக் கூடாதுனும் போராடலாம் என விசித்ரா தெரிவித்தார்.

இதையடுத்து எனக்கு இப்போ நடுங்குது. இப்போ வந்து என்னை முதலில் அட்டாக் பண்றது விஷ்ணுவாத் தான் இருக்கும் என மாயாவிடம் கூறி அழுதிருக்கிறார் பூர்ணிமா. அத்துடன் ப்ரொமோ வீடியோ முடிந்துவிட்டது.

விஷ்ணுவை நினைத்து பயந்து பூர்ணிமா அழுகிறார். அப்படி என்றால் அவர்களுக்கு இடையேயான காதல் முறிந்துவிட்டது போன்று என்று பார்வையாளர்கள் பேசத் துவங்கிவிட்டார்கள்.

மேலும் இந்த ஜாக்பாட் டாஸ்க் ஒன்றும் புதிது இல்லை பிக் பாஸ். முந்தைய சீசன்களில் கொடுத்த டாஸ்க்குகளையே இந்த சீசனிலும் கொடுக்கிறீர்கள். கொஞ்சம் மாத்தி யோசிங்க பிக் பாஸ். நீங்கள் எது செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி இந்த வார இறுதியில் சொருகிடுவேன் பற்றி நிக்சனுக்கு கமல் ஹாசன் லெஃப்ட் அன்ட் ரைட் விட வேண்டும்.

பிரதீப் ஆண்டனியால் பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கதறினார்கள். தற்போது நிக்சனோ சொருகிடுவேனு அர்ச்சனாவை மிரட்டியிருக்கிறார். கோபக்காரரான அவரால் பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை பிக் பாஸ். அதனால் நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுத்து சனிக்கிழமையே வெளியே அனுப்பி வைக்கவும் என பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று பிக் பாஸ் கூறியிருப்பது பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. யாரையோ காப்பாற்ற போட்ட திட்டம் போன்று இருக்கே என்கிறார்கள்.