ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் என மல்டி ஸ்டாரர் படமாக தலைவர் 170 உருவாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அனைவரையும் மதிக்கும் உயரிய பண்பு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆரம்பத்தில் அமிதாப் பச்சன் படங்களை ரீமேக் செய்து நடித்தே சூப்பர்ஸ்டார் ஆன ரஜினிகாந்த் 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் என்னுடைய குருவுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என அமிதாப் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார். அந்தா கனூன், ஹம் மற்றும் கெராஃப்டார் உள்ளிட்ட சில படங்களில் அமிதாப் பச்சன் உடன் முன்னதாக இணைந்து ரஜினி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.