நடிகர் யோகி பாபு 2020ம் ஆண்டில் மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்திருந்தார். அதன்பிறகு அவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் தனது மகளின் பிறந்தநாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார் யோகிபாபு. நேற்று மாலை நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில், அரசியல் பிரமுகர்கள், முன்னணி நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, பார்த்திபன், இயக்குநர்கள் சுந்தர் சி, அமீர், விஜய், நடிகைகள் குஷ்பூ, ஐஸ்வர்யா ராஜேஷ், பாடகர் மனோ, அமைச்சர்கள் உதயநிதி, மா சுப்ரமணியன், எம்பி தயாநிதி மாறன், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.. அவர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை யோகி பாபு தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

ஜெயம் ரவி தனது மனைவியுடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சூர்யா யோகி பாபுவின் மகளை தூக்கி கொஞ்சிய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகின. இவர்கள் தவிர மேலும் பல பிரபலங்கள் யோகி பாபுவின் மகள் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர். கோலிவுட்டின் ஒரு பாதியே யோகி பாபுவின் மகள் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.