பிக் பாஸ் சீசன் 7 துவங்கி மூன்று வாரங்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றது. மோதல்களுக்கு பஞ்சமில்லாமல் செல்லும் இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் முன்கூட்டிய மோதல்கள் துவங்கிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த சிசனின் முதல் வாரத்திலேயே எலிமினேஷன் நடைபெற்றது. அனன்யா குறைவான வாக்குகளை பெற்று முதல் போட்டியாளராக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதையயடுத்து பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு போட்டியார்கள் இரு வீட்டில் தங்கி வந்தனர். இந்நிலையில் இந்த சீசனில் மோதல்கள் துவங்கிவிட்ட நிலையில் தற்போது காதலும் ஜோராக துவங்கிவிட்டது.

முதல் சீசனில் ஓவியா மற்றும் ஆரவ் காதலித்ததாக பேசப்பட்டது. அதையடுத்து அடுத்த சீசனில் மஹத் மற்றும் யாஷிகா காதலிப்பதாக சொல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து கவின் மற்றும் லாஸ்லியா, பாலா மற்றும் ஷிவானி என ஒவொவொரு சீசனிலும் லவ் டிராக் போய்க்கொண்டிருந்தது. அதை போல இந்த சீசனிலும் லவ் டிராக் துவங்கி நடைபெற்று வருகின்றது.

இம்முறை ஒரு லவ் டிராக் இல்லாமல் இரண்டு லவ் டிராக் போய்க்கொண்டிருப்பதாக தெரிகின்றது. முதலில் ரவீனா மற்றும் மணி காதலித்து வருவதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். அவர்கள் நடந்துகொள்ளும் விதமும் அவ்வாறே இருக்கின்றது. அதைப்போல தற்போது நிக்சன் மற்றும் ஐஷு இடையே காதல் ஏற்பட்டதாக பேசப்பட்டு வருகின்றது.

கடந்த சில நாட்களாக நிக்சன் மற்றும் ஐஷு இடையே காதல் கண்டிப்பாக இருக்கும் என ரசிகர்கள் பேச துவங்கியுள்ளனர். இதையடுத்து இந்த சீசனில் இரண்டு லவ் டிராக் போய்க்கொண்டிருக்கும் நிலையில் இதனை பார்க்கும் சிங்கிள் ரசிகர்கள் கமெண்ட்களில் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

குருநாதா இவங்க லவ் பண்றதை எங்கள மாதிரி சிங்கிள் பசங்களால பார்க்கமுடியாது. சண்டையே போட வைங்க. இந்த லவ் லாம் வேணாம் குருநாதா என பிக் பாஸிடம் சிங்கிள் ரசிகர்கள் முறையிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.