நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கடந்த 5 நாட்களாக மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹாலிவுட் படமான டிகாப்ரியோவின் படத்தின் வசூலையே வெளிநாட்டில் முறியடித்துள்ள லியோ திரைப்படம் 500 கோடி வசூலை இன்றுடன் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு அடுத்த ஹைப்பை கொடுக்கும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ விஜயதசமியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

இந்த பூஜையில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், மீனாக்‌ஷி சவுத்ரி, சினேகா, லைலா, வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்ண்டுள்ளனர்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் மீண்டும் விஜய்யின் தளபதி 68 படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது. இந்த படத்துக்கு நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அர்ச்சனா கல்பாத்தி மீண்டும் விஜய் படத்தை தயாரிப்பதில் செம ஹேப்பி என ட்வீட் போட்டுள்ளார்.

தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வாரிசு படம் போல குடும்ப பாங்கான படமாக தளபதி 68 வரும் என தெரிகிறது. பிரசாந்த், மைக் மோகன், பிரபு தேவா, சினேகா, மீனாக்‌ஷி சவுத்ரி, லைலா, அஜ்மல், யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.