லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் 'லியோ'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசாகியுள்ள இந்தப்படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள். நீண்ட காத்திருப்பு பிறகு வெளியாகியுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்நிலையில் முதல் நாளிலே வசூலிலே மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது 'லியோ'.

இந்நிலையில் நேற்று முன்தினம் 'லியோ' படம் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் பான் இந்திய அளவில் கடந்த வியாழக்கிழமை வெளியாகியுள்ளது 'லியோ'. முதல் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்ற இப்படம், அதனை தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற ஆரம்பித்தது.

இந்நிலையில் உலகம் முழுவதும் 'லியோ' படம் முதல் நாளிலே ரூ.148.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரூ. 100 கோடி வரை முதல் நாளில் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதைத்தாண்டி வசூலித்து சாதனை படைத்துள்ளது 'லியோ'.

ரஜினியின் ‘2.0’ முதல் நாளில் ரூ.110 கோடியை வசூலித்தது. 'ஜவான்' ரூ.129 கோடியை அள்ளி இருந்தது. அந்த சாதனையை எல்லாம் தற்போது விஜய்யின் 'லியோ' முறியடித்துள்ளது.

இதன் மூலமாக தமிழ்நாட்டில் ரிலீசான அன்றே அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது 'லியோ'. மேலும் கேரளாவில் ஆல் டைம் பெரிய ஓபனிங் பெற்ற தமிழ் படம், கர்நாடகாவில் அதிகம் வசூல் செய்த படம் உள்ளிட்ட சாதனைகளையும் புரிந்துள்ளது. அத்துடன் அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் இருப்பதால் 'லியோ' படத்தின் வசூல் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.