இலங்கை

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வுக்கு இசை கலைஞர்கள் பலரும் யாழிற்கு வருகை தந்துள்ளனர்.

குறித்த நிகழ்ச்சியானது யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் யாழ் சர்வதேச விமான நிலையம் ஊடாக தென்னிந்திய நடிகர் சித்தார்த் உட்பட இசை கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த இசை நிகழ்வானது யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த இசை நிகழ்வினை பார்வையாளர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.