பிக் பாஸ் சீசன் 7ன் முதல் கேப்டனாக விஜய் வர்மா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முதல் கேப்டனாக இருக்கும் விஜய் வர்மாவைக் கவராத போட்டியாளர்கள் என ரவீனா, வினுஷா, நிக்சன், ஐஷு, அனன்யா, பவா செல்லத்துரை ஆகிய 6 போட்டியாளர்கள் ஸ்மால் வீட்டுக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர். அவர்கள் மாற்றப்பட்டது மட்டுமில்லாமல் அதிரடியான பல ரூல்ஸ் போடப்பட்டுள்ளது

இதையடுத்து, இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது. வழக்கமாக முதல் வாரத்திற்குப் பிறகுதான் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் நன்றாக தெரிந்து கொள்வார்கள் என்பதால், முதல் வாரம் நாமினேஷன் இருக்காது. ஆனால் இந்த சீசனில் இரு வீடுகள் மற்றும் இரட்டை நாமினேஷன் முறை அமலுக்கு வந்துள்ளதால், முதல் நாளே நாமினேஷன் தொடங்கியது.

இதில், அதன்படி ஐஷு, அனன்யா, ரவீனா, ஜோவிகா, யுகேந்திரன், பிரதீப் மற்றும் பவா செல்லதுரை ஆகிய 7 பேர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். நாமினேஷன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் யார் என்பது பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன. இதில் பிரதீப் மற்றும், யுகேந்திரன் ஆகியோர் டேஞ்சர் ஜோனில் இருக்கின்றனர்.