மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக நேற்று தொடங்கியது. ஆறு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.

இதில், கூல் சுரேஷ்,பூர்ணிமா ரவி, ரவீணா,பிரதீப் ஆண்டனி, நிக்ஸ்ன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அனூஷயா உதயக்குமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பாவா செல்லத்துரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக இரண்டு மூன்று நாட்களுக்கு பின் தான் கேப்டன் பதவிக்கான டாஸ்க் நடக்கும். ஆனால், இந்த முறை போட்டியாளர்களின் அறிமுகம் ஒருபக்கம் நடக்க, கேப்டன் பதவிக்கான போட்டியும் நடந்தது. இதில் பிக் பாஸ் சீசன் 7ன் முதல் போட்டியாளராக விஜய் வர்மா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ காலை 9 மணிக்கு வெளியானது. முதல் ப்ரோமோவில் வீட்டின் முதல் கேப்டனாக இருக்கும் விஜய் வர்மாவைக் கவராத போட்டியாளர்கள் என ரவீனா, வினுஷா, நிக்சன், ஐசு, அனன்யா, பவா செல்லத்துரை ஆகிய 6 போட்டியாளர்கள் இன்னொரு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதையடுத்து, தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஒவ்வொரு வாரமும் ஆறு ஹவுஸ்மேட்ஸ் கேப்டனால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறிய வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள், அந்த 6பேரும் பின்வரும் விதிமுறைகளைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.

சிறிய வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குச் செல்லக்கூடாது, எந்த டாஸ்க்கிலும் பங்கு பெற கூடாது, ஷாப்பிங் போகக் கூடாது, மூன்று வேளைக்கான மெனுவை பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்வார்கள், அதைத்தான் அவர்கள் சமைக்க வேண்டும், பிக்பாஸ் வீட்டின் ஹவுஸ் கிளீனிங் மற்றும் பாத்ரூம் கிளீனிங் வேலைகளை சிறிய வீட்டில் இருப்பவர்கள் தான் செய்ய வேண்டும் என அடுக்கடுக்கான ரூல்ஸ்களை போட்டு போட்டியாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இந்த ப்ரோமோவைப் பார்த்த நெட்டிசன்ஸ் அட இதுவும் நல்லத்தான் இருக்கு என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். உள்ளே இருக்கும் சில போட்டியாளர்கள் ஏன்டா வந்தோம் என்று இப்போதே நினைக்கத் தொடங்கி விட்டனர்.