பிக்பாஸ் ஏழாவது சீசன் இன்று ஆரம்பமாகி உள்ளது.

இதுவரை ஒரு வீட்டில் நடந்துவந்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடுகளில் நடைபெறவிருக்கிறது. ஒரு வீடுனாலே கண்ட்டெண்ட்டுக்கு பஞ்சம் இருக்காது தற்போது இரண்டு வீடுகளில் நடைபெறவிருப்பதால் பிக்பாஸ் வீட்டில் பஞ்சாயத்துக்கு பஞ்சமே இருக்காது என்று ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்த சீசனில் யார் யார் கலந்துகொள்ளபோகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உச்சக்கட்டமாகவே இருந்தது.

இந்நிலையில் மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரீட்சியமான மற்றும் பரீட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அந்த வகையில் பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் வாரிசான யுகேந்திரன் வாசுதேவன் கலந்துகொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இவர் இது வரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் இவர் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவர் பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.

அதேபோல் விஜய் நடித்த யூத் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மலேசியா வாசுதேவன் மறைந்த பிறகு நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்டார் யுகேந்திரன்.

அங்கு ரம்புட்டான் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி உலகம் முழுவதும் இசை கான்செர்ட்டுகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் யுகேந்திரன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் அவர் ஏவ்வாறு விளையாடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. குறிப்பாக இவரது தந்தை சினிமாவில் மிகப்பெரிய ஆளுமை கொண்டவர் என்பதால் ஹவுஸ் மேட்ஸ் இவரிடம் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.

எனவே தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள யுகேந்திரன் அவர்கள் இந்த சீசனில் சிறப்பாக பங்குபற்றி மக்கள் மனதில் இடம்பெற அரசன் நியூசிலாந்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.