லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாக்கியிருக்கும் படம் லியோ திரைப்படம்.

விஜய் நடித்திருக்கும் இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த,கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் திகதி ரிலீஸாக உள்ளது.

இந்த சூழலில் லியோ ஆடியோ ரிலீஸ் செப்டம்பர் 30ஆம் திகதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறாது என்று படத்தை தயாரித்திருக்கும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து அந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், "ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான பாஸ் கோரிக்கைகள் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமின்றி பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் கருத்தில் கொண்டு லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி படத்தின் அப்டேட்டுகளை வெளியிடுவோம். அதேபோல் பலர் நினைப்பது போல் இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு எதுவுமோ காரணம் இல்லை" என குறிப்பிட்டுள்ளது.