இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 28ம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தில் லாரன்சுடன் கங்கணா ரனாவத், மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த வாரத்திலேயே திட்டமிடப்பட்ட நிலையில், செப்டம்பர் 28ம் திகதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் ரிலீசையொட்டி அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

இந்த சந்திப்பின்போது சந்திரமுகி 2 படத்தின் ரிலீசையொட்டி அவரிடம் ஆசி பெற்றுள்ளார் லாரன்ஸ்.

மேலும் ரஜினியின் ஜெயிலர் வெற்றிக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

இந்த சந்திப்பின் புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள லாரன்ஸ், தலைவர் எப்பவும் க்ரேட் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2005ம் ஆண்டில் வெளியான சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் லீட் கேரக்டரில் நடித்திருந்தார். ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில், பி வாசு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சூப்பர்‌ ஹிட்டடித்தது.

இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் லீட் கேரக்டர்களில் நடித்து படம் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது.