ஐரோப்பா மீதான கொரோனா வைரஸ் தாக்கத்தின் அழுத்தத்தைக் குறைப்பதற்காக ஜேர்மன் இராணுவ மருத்துவர்கள் போர்ச்சுகலுக்கு சென்றுள்ளனர்.

சுமார் 10.2 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட போர்ச்சுகல் தற்போது ஐரோப்பாவின் மிக அதிகமான தொற்று விகிதங்களில் உள்ள நாடாக உள்ளது.

அந்நாட்டில் இதுவரை 741,000-க்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13,500க்கும் அதிகமானோர் இறந்துள்ளானார்.

குறிப்பாக ஜனவரி மாதத்தில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் அந்நாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதியை நெருங்குகிறது.

இதனால், போர்ச்சுகல் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஐ.சி.யூக்கள் நிரம்பியுள்ளன. நிறைய நோயாளிகள் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் இளம் வயதினர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜேர்மனியின் 26 இராணுவ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு, Luftwaffe Airbus A400M விமானத்தில் பயணித்து போர்ச்சுகல் நாட்டு தலைநகரமான Lisbon-ல் உள்ள ஒரு பொது மருத்துவமனைக்கு புதன் கிழமை அன்று சென்றது.

அந்நாட்டில், மோசமாக பாதிக்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ ஊழியர்கள் 3 வாரங்கள் பணியில் ஈடுபடவுள்ளனர்.

அதன் பிறகு இதேபோல் மற்றொரு குழு வந்த பிறகு அவர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.