துருக்கி நிலநடுக்க மீட்பு பணிகளின் போது நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி 10 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்றில் சிக்கி பலியான நபர்களின் உடல்களை பொலிஸார் அகற்றி வந்துள்ளனர்.

அப்போது கட்டிடம் ஒன்றிற்கு கீழ் சிறுமி ஒருவர் சிக்கியபடி இருந்துள்ளார்.

அவருக்கு மேலே பெரிய சுவர் ஒன்று விழுந்த நிலையில் இருந்துள்ளது.

அருகிலேயே அந்த சிறுமியின் தம்பியும் இருந்துள்ளார். இருவர் மீதும் அந்த சுவர் விழுந்தபடி இருந்துள்ளது.

அந்த சிறுமியை அதிகாரிகள் பார்த்தபோது அவர் தனது தம்பியின் தலையின் மேல் கை வைத்தபடி தனது தம்பியின் தலையில் எதுவும் விழுந்துவிடாதபடி தன்னுடைய உயிர் போனாலும் கூட பரவாயில்லை என்று அந்த சிறுமி தனது தம்பிக்கு கேடயமாக இருந்துள்ளார்.

மொத்தம் 17 மணி நேரம் அந்த சிறுமி தனது தம்பிக்கு இப்படி பாதுகாப்பு அரணாக இருந்துள்ளார்.

மீட்பு பணியினர் அவர்களை மீட்க வந்த போது அந்த சிறுமி அவர்களை சிரித்தபடி வரவேற்றுள்ளார்.

அந்த சிறுமிக்கு அதிகபட்சம் 5 வயதுதான் இருக்கும். அவரின் தம்பிக்கு 3-4 வயது இருக்கும். இருந்தாலும் பெரிய மனுஷி போல செயல்பட்டு, தனது உயிருக்கு அஞ்சாமல் அந்த சிறுமி தனது தம்பியை பொறுப்பாக காப்பாற்றி உள்ளார்.

அந்த சிறுமியை தற்போது துருக்கி ரியல் ஹீரோ என்று கூறி கொண்டாடி வருகிறது.

அந்த சிறுமி அவரின் தம்பி இருவரும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.