இந்தியா: தமிழ்நாடு

எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை மொத்தம் 96 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

திமுக தரப்பில் ஈரோடு இடைத்தேர்தலுக்காக 11 அமைச்சர்கள் தலைமையிலான படை களமிறக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் முத்துசாமி தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் பெப்ரவரி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரம் மக்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் மூலம் செய்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனால் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.