ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு தேர்தலில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று 2030 வரை அவர் ஜனாதிபதியாக நீடிப்பார் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்

அத்தோடு ஜனாதிபதி தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.