தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலத்தில் பெரும் உச்சம் தொட்டவர்களில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.

இருந்தாலும் அவருக்கு எதிரான விமர்சனங்களும் சர்ச்சைகளும் அதிகரித்து கொண்டேதான் இருக்கின்றன.

ராஷ்மிகாவின் சிரிப்பு, வொர்க்அவுட், பேச்சு, முகபாவனை என அனைத்தையும் சமீப காலமாக பலரும் டிரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தனக்கு வரும் மோசமான கமெண்டுகளால் மனமுடைந்து இருக்கும் ராஷ்மிகா தற்போது தனது மனக்குமுறலை சமீபத்திய பேட்டியொன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரேமா தி ஜர்னலிஸ்ட் சேனலிடம் அவர் கூறியதாவது...

மக்களுக்கு என் உடலிலேயே பிரச்சனை இருக்கிறது. நான் வொர்க்அவுட் செய்தால் ஆண் போல இருப்பதாக சொல்கிறார்கள்.

வொர்க்அவுட் செய்யாவிட்டால் குண்டாக இருப்பதாக சொல்கிறார்கள்.

நான் அதிகமாக பேசினால் கிரிஞ்ச் என்று சொல்கிறார்கள், பேசவில்லை என்றால் திமிராக இருப்பதாக சொல்கிறார்கள்.

நான் மூச்சு விட்டாலும் அவர்களுக்கு பிரச்சனை நான் மூச்சு விடவில்லையென்றாலும் அவர்களுக்கு, நான் என்னதான் செய்வது? நான் சினிமா விலக வேண்டுமா?இருக்க வேண்டுமா? என்று பேசி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

தன்னை பற்றி கூறும் கருத்துக்கள் சரியானதாக இருந்தால் நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் இதுபோன்று தவறாக கூறுவது என் மனதை பாதிக்கிறது.

என்னுடன் உங்களுக்கு பிரச்சனை என்றால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்.

துஷ்பிரயோகம் செய்யாதீர்கள், அவர்கள் பயன்படுத்தும் சில வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் நம்மில் சிலரை மனதளவில் பாதிக்கிறது என கூறி உள்ளார்.

எப்போதும் ராஷ்மிகா குறும்புத்தனமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு இவர் தற்போது இப்படி மனக்கலக்கத்துடன் பேசியிருப்பது ரசிகர்களை மனம் கலங்க செய்துள்ளது.