அழகுப்போட்டிகள் பொதுவாக ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்காக நடத்தப்படும்.

சில நாடுகளில் அழகுப்போட்டிகள் விலங்குகளுக்கும் நடத்தப்படுகின்றன.

அப்படி ரஷ்யாவில் பசு மாடுகளுக்கான அழகிப் போட்டிகள் நடத்தப்பட்டது. ரஷ்யாவின் யாகுடியா என்ற இடத்தில் இந்த போட்டி நடந்துள்ளது.

இதில் மிச்சியே என்ற பசு பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 25 பசுக்கள் கலந்துகொண்டன.

அழகிப் போட்டியில் வென்ற மிச்சியேவுக்கு 40 லிற்றர் பால் கேன் பரிசாக வழங்கப்பட்டது.

மிச்சியே யாகுட் ஹியஃபோர்ட் என்ற இரண்டு இனங்களின் கலவை பசுவாகும்.

யாகுடியாவில் இரண்டாவது முறையாக இந்த போட்டிகள் நடைபெறுவதாக டி என் ஏ செய்தி தளம் கூறுகிறது. கடந்த வருடம் நடத்தப்பட்ட போட்டியில் ஊட்டாய் டூட்டாய் என்ற இரட்டை மாடுகள் பட்டத்தை வென்றன . இந்த போட்டியில் பங்கெற்ற பசுக்களின் புகைப்படங்கள் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளன

கேட்பதற்கு சற்று வினோதமாக இருந்தாலும், உலகில் வித்தியாசமான சில விலங்குகளுக்கான அழகுப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஆடுகளுக்கான பியூட்டி கான்டெஸ்ட்கள் நடத்தப்படுகின்றன.

இது போல புறாக்கள், ஒட்டகச்சிவிங்கிகள், யானை, பால்கன் பறவை, எட்டுக்கால் பூச்சி போன்றவற்றிற்கும் பியூட்டி கான்டெஸ்ட்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.