மெக்சிகோ போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படும் நாடு.

கடத்தல் கும்பலை ஒழிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.

இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் இருந்து பிளாங்கா ஒலிவியா ஆரில்லேனோ கட்டிரெஸ் என்ற 51 வயது பெண் ஆன்லைன் வழியே ஜூவான் பேப்லோ ஜீசஸ் வில்லாபுர்தே என்ற ஆணை தொடர்பு கொண்டுள்ளார்.

இது நாளடைவில் காதலானது. இதனை தொடர்ந்து தனது காதலரை சந்திக்க பிளாங்கா ஒலிவியா முடிவு செய்துள்ளார்.

ஆனால், அதன் பின்னரே அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

காதலரை பார்ப்பதற்காக மகிழ்ச்சியுடன் புறப்பட்டு 5 ஆயிரம் கி.மீ. கடந்து பயணம் செய்துள்ளார்.

அவர் சென்று சேர்ந்த பின்னரே அந்த நபர் உறுப்புகளை திருடும் நபர் என தெரிய வந்துள்ளது.

அதற்குள் அவரது உயிர் பறிபோய் விட்டது.

ஜூவான் தனது காதலியின் உறுப்புகளை பிரித்து எடுத்து உள்ளார். 

இது தெரியாமல் பிளாங்காவின் உறவினரான கர்லா ஆரில்லேனோ, பிளாங்காவிடம் பேசிய, பதில் வராத உரையாடல்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதுதவிர, பிளாங்காவின் காதலரிடமும் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.

ஆனால், அந்த நபரிடம் இருந்து, ஒரே போரிங் (வெறுப்புணர்வு) ஆக இருக்கிறது என கூறி பிளாங்கா மெக்சிகோவுக்கே திரும்பி சென்று விட்டார் என பதில் வந்துள்ளது.

இந்நிலையில் ஹுவாச்சோ பீச்சில் மீன் பிடித்த மீனவரின் வலையில், கொல்லப்பட்ட நிலையிலான பிளாங்காவின் உடல் சிக்கியுள்ளது.

இதில், பிளாங்கா கொல்லப்பட்டது உறுதியானது.

அவரது உடல் உறுப்புகள் பல காணாமல் போயுள்ளன.

இதற்கு நீதி வேண்டும் என கர்லா அவர் குரல் கொடுத்துள்ளார்.

ஜூவானை கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.