போலீசார் உங்கள் நண்பன் என்று என்ன தான் மைக் போட்டு சொன்னாலும் கூட பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே எப்போதும் ஒரு இடைவெளி இருந்து கொண்டு தான் இருக்கிறது.

எங்காவது தாங்கள் கைதாக வேண்டும் என்று இளைஞர்கள் கூறி பார்த்து உண்டா?

ஆனால், உண்மையில் தென் ஆப்பிரிக்க நாடான கொலம்பியாவின் மெடலின் நகரில் உள்ள இளைஞர்கள் கைதாவதற்கு ஆர்வமாக உள்ளனராம்.

அதிலும் போலீஸ் அதிகாரியான டயானா ராமிரெஸ் தான் தங்களைக் கைது செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

அப்படிச் சொல்ல என்ன காரணம்? யார் இந்த டயானா எனக் கேட்கிறார்களா?

உலகின் 'மிக அழகான போலீஸ்காரர்' என்று அழைக்கப்படுபவர் டயானா. இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களில் ஒன்றான மெடலின் நகரில் பெண் ஒருவர் போலீசாக இருப்பதில் உள்ள சிக்கல்களை அவர் தனது சமூக வலைத்தளங்களில் ஆவணப்படுத்தி வருகிறார்.

 சமூக வலைத்தளங்களில் லட்சக் கணக்கான ஃபாலோவர்களை கொண்டிருந்தால் பலரும் அதில் வரும் வருமானத்தை வைத்துக் கொண்டே ஜாலியாக இருப்பார்கள். ஆனால், டயானா எப்போதும் போலீஸ் வேலையிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'எனக்கு மாடலாகும் வாய்ப்பும் கூட வந்தது. ஆனால், எனக்கு அதையெல்லாம் விடக் குற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் தான் விருப்பம் உள்ளது.

இப்போது மாடலாகும் வாய்ப்பு வந்தாலும் கூட அதை நான் ஏற்க மாட்டேன். மீண்டும் போலீஸ் வேலையையே தேர்வு செய்வேன். ஏனென்றால் போலீசாக இருப்பதே எனது ஆசை.

அதில் தான் எனக்குப் பெருமை' என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 'என்னைப் பொறுத்தவரை, இந்த விருது எங்கள் நாட்டு போலீசாருக்கே கிடைத்த மரியாதையாகவே கருதுகிறேன். இதற்காக நான் சந்தோசப்படுகிறேன்.

ஒறு சிறந்த நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் எந்தளவுக்குக் கஷ்டப்படுகிறோம் என்பது மக்களுக்குத் தெரிகிறது.

இது போலீசார் எந்தளவுக்கு அர்ப்பணிப்புடன் உள்ளனர் என்பதை மக்களுக்குக் காட்ட உதவுகிறது' என்றார்.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலீசாக இவர் மேற்கொள்ளும் பணிகளின் படங்களை ஃபோட்டோக்களாக எடுத்துப் பதிவிட்டு வருகிறார்.

இதைப் பார்த்து ஹார்டின்களை அள்ளிவிடும் இளசுகள், இவர் போலீஸ் என்றால் எப்போதும் கைதாக ரெடி என கமென்ட் செய்து வருகின்றனர்.