இன்று மாலை வைகாடோவில் Matamata அருகே கார் ஒன்று டிரக் மீது மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று மாலை 5 மணியளவில் Diagonal வீதி மற்றும் McLaren வீதி சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சாலை மூடப்பட்டுள்ளதுடன் மாற்றுப்பாதைகள் உள்ளதாகவும் வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்க வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.