நள்ளிரவில் வணிக வளாகங்களில் நடந்த தொடர் திருட்டுகள் குறித்து வைகாடோ பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன்படி ஹமில்டன் புறநகர் பகுதியான Chartwell இல் உள்ள Westfield Mall இல் அதிகாலை 1.20 மணிக்குப் பிறகு இடம்பெற்ற ஒரு கொள்ளை சம்பவம் குறித்து தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அதிகாலை 3.55 மணியளவில் ஹமில்டனின் Naylor தெருவில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் முன்பக்கக் கதவை வாகனம் ஒன்றை பயன்படுத்தி திருடர்கள் உடைத்து சேதப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் Cambridge சாலையில் இரண்டு கஃபேக்கள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதனிடையே Tamahere, Devine சாலையில் உள்ள ஒரு வளாகத்தில் திருட்டுச் சம்பவம் நடந்ததாகவும் தங்களுக்கு புகார் வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், Thames இல் அதிகாலை 2 மணியளவில் ஒரு கஃபே திருடப்பட்டது மற்றும் அந்த இடத்திலிருந்து ஒரு கார் திருடப்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அதே வாகனத்தில் Pollen தெரு வளாகத்தில் கொள்ளையர்கள் ஒரு திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

வைகாடோ மாவட்ட கமாண்டர் ஆண்ட்ரியா மெக்பெத் கூறுகையில்..

"இந்த மோசமான கொள்ளை சம்பவங்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்"

"தற்போது நடைபெறும் வணிகக் கொள்ளைகள் தொடர்பான பொதுமக்களின் விரக்தியை நாங்கள் புரிந்துகொள்கிறோம்" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த திருட்டுகள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.