அண்டார்டிகாவிற்கு பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னை ஏற்றிச் சென்ற விமானம் McMurdo Sound என்ற இடத்தில் மோசமான வானிலை காரணமாக கிறிஸ்ட்சர்சிற்கு திரும்பியுள்ளது.

நியூசிலாந்தின் அண்டார்டிக் இல்லமான ஸ்காட் பேஸின் 65வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவும், இரண்டு வருட கொவிட்-19 இடையூறுக்குப் பிறகு அண்டார்டிக் ஆராய்ச்சியின் முதல் பருவத்தைக் கொண்டாடவும் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்‌ நான்கு நாட்கள் பயணமாக தென் துருவத்தை நோக்கி இன்று பயணமானார்.

இந்நிலையில் அவரை ஏற்றிச் சென்ற C130 ஹெர்குலஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக கிறிஸ்ட்சர்சிற்கு திரும்பியுள்ளது.

இந்த விமானத்தில் பல விஞ்ஞானிகள் மற்றும் அண்டார்டிக் நியூசிலாந்து ஊழியர்களும் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.